Completed Events
26
Jul 2019
Transgender Empowerment : Renovated Chicken shed and Donated Chicks to transgender Community, Kanchipuram
காஞ்சிபுரம் திருநங்கைகள் நகரை சேர்ந்த திருநங்கைகளுக்கு, சுய தொழில் செய்து முன்னேறும் பொருட்டு பயன்படுத்தப்படாமல், முழுமை அடையாமல் இருந்த 'நாட்டுக்கோழி வளர்ப்பு கொட்டகை'யில், நீர் மற்றும் மின் வசதி ஏற்படுத்தி கொடுத்து, தரைத் தளம், கதவு, ஜன்னல் ஆகியவற்றை புதுப்பித்து கொடுத்துள்ளோம். மேலும், பீடர் வசதியுடன், சுமார் 200 நாட்டு கோழி குஞ்சுகள் வாங்கி கொடுத்துள்ளோம். அவற்றை வளர்ப்பதற்கு தேவையான தீவனமும் அளித்துள்ளோம். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாழ்வில் முன்னேறிக்காட்டுவதாக திருநங்கைகள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உறுதுணையாக இருந்த லாரன்ஸ் அவர்களுக்கு நன்றி. #கிருஷ்ணப்ரியாபவுண்டேசன் #kpf #krishnapriyafoundation #ngo #chennai #TransgenderEmpowerment