நீர் நிலை சீரமைப்பு : Water Body Restoration : Revamped Sewage Canal near Subbaiar Kulam, Nagercoil

Home /

 Completed Events / நீர் நிலை சீரமைப்பு : Water Body Restoration : Revamped Sewage Canal near Subbaiar Kulam, Nagercoil

Back

Completed Events

19
Jul 2019

நீர் நிலை சீரமைப்பு : Water Body Restoration : Revamped Sewage Canal near Subbaiar Kulam, Nagercoil

நீர் நிலை சீரமைப்பு : நாகர்கோவில் நகரில் உள்ள சுப்பையார் குளத்தை ஒட்டி உள்ள கழிவு நீர் வாய்க்காலை புதிய தலைமுறையின் 'நம்மால் முடியும் குழு' மற்றும் சுப்பையார் குளம் நீர் மேலாண்மை குழு ஆகியோருடன் இணைந்து சீரமைத்துள்ளோம். https://www.youtube.com/watch?v=PM4LlzDnVEE இந்த கழிவு நீர் வாய்க்காலின் ஒரு பகுதி சிதிலமடைந்து இருந்ததால் அருகில் உள்ள வீடுகளின் கழிவு நீர் அனைத்தும் சுப்பையார் குளத்தில் கலந்து வந்தது. இந்த சீரமைப்பு பணியினால் கழிவு நீர் அனைத்தும் முக்கிய கழிவு நீர் வாய்க்காலை சென்று சேர்கிறது. குளத்தில் மேற்கொண்டு கழிவு நீர் கலக்காமல் செய்திருக்கிறோம். கழிவு நீரால் நிரம்பி உள்ள இந்த குளத்தின் நீரை வெளியேற்றி, தூர் வார மாநகராட்சியின் உதவியை கேட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நீர் நிலை சீரமைப்பு பணியில் எம்மோடு இணைந்து செயல்பட்ட அனைவருக்கும், பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #kpf #krishnapriyafoundation #ngo #chennai

Event Gallery