நீர் நிலை சீரமைப்பு : Water Body Restoration : திருவாரூர் அருகில் உள்ள களிமங்கலம் கிராம ஓடை சீரமைக்கப்பட்டது

Home /

 Completed Events / நீர் நிலை சீரமைப்பு : Water Body Restoration : திருவாரூர் அருகில் உள்ள களிமங்கலம் கிராம ஓடை சீரமைக்கப்பட்டது

Back

Completed Events

15
Jun 2019

நீர் நிலை சீரமைப்பு : Water Body Restoration : திருவாரூர் அருகில் உள்ள களிமங்கலம் கிராம ஓடை சீரமைக்கப்பட்டது

நீர் நிலை சீரமைப்பு : திருவாரூர் அருகில் உள்ள களிமங்கலம் கிராம ஓடையை தூர்வார வேண்டும் என்று புதிய தலைமுறையின் 'நம்மால் முடியும்' குழு மூலம் எமக்கு தகவல் வந்தது. அதன் பேரில் நம்மால் முடியும் குழுவுடன் இணைந்து, பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்த இந்த ஓடையில் சீமை கருவேல மரங்கள் மற்றும் காட்டாமணக்கு செடிகளை அகற்றி, ஓடையை ஆழப்படுத்தி, அந்த மண்ணைக்கொண்டு கரைகளை உயர்த்தி உள்ளோம். இந்த பணியை திருமதி.வெண்ணிலா தலைமையிலான திருவாரூர் நீர்நிலை பராமரிப்பு அமைப்பினர் முன்னெடுத்தனர். திரு.வனம் கலைமணி தலைமையிலான வனம்-தன்னார்வ அமைப்பு இந்தப்பணியில் கலந்து கொண்டு சீமை கருவேல மரங்களை அகற்ற உதவினர். மழைக்காலம் துவங்கியதும் ஓடையை சுற்றி மரக்கன்றுகள் நடுவதாகவும் உறுதியளித்துள்ளனர். களிமங்களம் கிராம மக்களுக்கும், கால்நடைகளுக்கும், நிலத்தடி நீரை மேம்படுத்தவும் இந்த ஓடை சீரமைப்பு பணி உதவிகரமாக இருக்கும் என நம்புகிறோம். இந்த நீர் நிலை சீரமைப்பு பணியில் எம்மோடு இணைந்து செயல்பட்ட அனைவருக்கும், பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். Video link : http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/nammal-mudiyum/24523-nammal-mudiyum-13-07-2019.html #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #kpf #krishnapriyafoundation #ngo #chennai

Event Gallery