Donated sports goods to Govt. Adi Dravidar Welfare Hr. Sec. School, Savalakkaran village, Tiruvarur Dt

Home /

 Completed Events / Donated sports goods to Govt. Adi Dravidar Welfare Hr. Sec. School, Savalakkaran village, Tiruvarur Dt

Back

Completed Events

05
Apr 2019

Donated sports goods to Govt. Adi Dravidar Welfare Hr. Sec. School, Savalakkaran village, Tiruvarur Dt

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் “ விகடன் ” வலைதளத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தாலும் தங்கள் விடாமுயற்சியால் கால்பந்து விளையாட்டில் தொடர்ந்து சாதித்து வரும் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி (சவளக்காரன் கிராமம், திருவாரூர் மாவட்டம்) மாணவியர் பற்றிய செய்தி வந்திருந்தது. https://www.vikatan.com/news/tamilnadu/149330-a-story-about-savalakkaran-village-girl-football-players.html நம் மாணவ மாணவியர் உரிய பயிற்சி மேற்கொள்ளவும், அதன் மூலம் மேலும் பல சாதனைகள் புரியவும் உடனடி தேவையான 10 காஸ்கோ கால்பந்துகள், 36 ஜோடி செகா காலணிகள், ஸ்டாக்கிங்ஸ், நிவியா கோல் கீப்பர் க்ளோவ்ஸ், நைலான் கோல் போஸ்ட் நெட், ட்ரைனிங் கோன் ஆகிய கால்பந்து விளையாட்டு உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது. புதிய விளையாட்டு உபகரணங்களை பெற்றுக்கொண்டவுடன் மாணவ மாணவியர் ஆர்வமுடன் விளையாட துவங்கினர். கால்பந்து விளையாட்டில் நிச்சயம் பல புதிய சாதனைகளை புரிவர் என்ற நம்பிக்கை கீற்று அவர்தம் முகங்களில் தெரிகிறது. இந்த செய்தியை வெளிக்கொணர்ந்த விகடன் நிறுவனத்திற்கும், உறுதுணை புரிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோருக்கும், தொடர்பு விவரங்களை அளித்து உதவிய வனம் கலைமணி அவர்களுக்கும் நன்றி. #kpf #krishnapriyafoundation #krishnapriyafoundationngo #ngo #chennai

Event Gallery