'Cyclone Gaja : Rehabilitation Activities' : Krishnapriya foundation has repaired roof,floor,doors,toilets & name board at Rendam Pulikadu Govt School

Home /

 Completed Events / 'Cyclone Gaja : Rehabilitation Activities' : Krishnapriya foundation has repaired roof,floor,doors,toilets & name board at Rendam Pulikadu Govt School

Back

Completed Events

13
Jan 2019

'Cyclone Gaja : Rehabilitation Activities' : Krishnapriya foundation has repaired roof,floor,doors,toilets & name board at Rendam Pulikadu Govt School

'Cyclone Gaja : Rehabilitation Activities' : Krishnapriya foundation has repaired roof, floor, doors, toilets and name board at Rendam Pulikadu Govt Hr. Sec. School, which was affected by cyclone Gaja. This rehabilitation activity was carried out along with Puthiya Thalaimurai's 'Nammal Mudiyum' initiative. பட்டுக்கோட்டை அருகில் உள்ள இரண்டாம் புளிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியின் ஓட்டுக்கட்டிடம், கழிவறை, பெயர் பலகை ஆகியவை கஜா புயலால் பாதிக்கப்பட்டதாக புதிய தலைமுறையின் 'நம்மால் முடியும்' குழு மூலம் எமக்கு தகவல் வந்தது. எமது தன்னார்வலர்கள் அங்கு நேரில் சென்று பாதிப்புகளை பார்வையிட்டனர். கட்டிடத்தின் கூரை, தரை மற்றும் கதவுகள் ஆகியவை சேதமடைந்திருந்தன. கழிவறை பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. பெயர் பலகை தூண்களோடு பெயர்ந்து விழுந்திருந்தது. பின்னர் கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள், புதிய கதவுகள், தேவையான அளவு ஓடுகள், கழிவறையை புதுப்பிக்க வேண்டிய பொருட்கள் ஆகியவற்றை எமது தன்னார்வலர்கள் வாங்கி, அங்கு தொழிலாளிகளோடு வேலை செய்து, மேற்சொன்ன அனைத்தையும் புதுப்பித்துக்கொடுத்தனர். பெயர் பலகைக்கு புதிய கான்க்ரீட் தூண்கள் அமைக்கப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவோடு நிலைநிறுத்தப்பட்டது. இப்பணியில் எம்மோடு இணைந்து செயல்பட்ட புதிய தலைமுறையின் 'நம்மால் முடியும்' குழு, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

Event Gallery